tamilnadu

பயிர் காப்பீட்டு திட்டம்

ஈரோடு, ஜூலை 10- பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2019-20ம் ஆண்டில் இத்திட்டத்தில் ‘காரீப் 2019” பருவத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கை செய் யப்பட்ட கிராமங்கள், பிர்காக்கள், வேளாண் பயிர்கள் மற்றும் தோட் டக்கலை பயிர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்திலும், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, புயல், மழை,  ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடு களால் ஏற்படும் இழப்பிற்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.  மேலும் இவ்வாண்டு முதல் ஈரோடு மாவட்டம் தொகுப்பு 6-ன் கீழ் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத் தின் மூலம் பயிர் காப்பீடு செய் யப்பட உள்ளது.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள்

நடப்பு காரீப்-2019 பருவத் திற்கு வேளாண் பயிர்களை பொருத்த வரையில் மக்காச் சோளம், துவரை, உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்கள் வருவாய் கிராம அளவிலும், ராகி மற்றும் எள் ஆகிய பயிர்கள் பிர்க்கா அளவிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தோட்டக் கலைப் பயிர்களில் வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், வெண்டைக்காய், முட்டைக் கோஸ், உருளைக்கிழங்கு, மா மற்றும் கொய்யா ஆகிய பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்யும் முறை
வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கிகள் முலம் பயிர்கடன் பெரும் விவசாயிகள் கட்டாய மாக இத்திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். பயிர் கடன்பெறா விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாகவோ வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம்.

காப்பீடு கட்டண விவரம்
வேளாண் பயிர்களை பொருத்த வரையில் நடப்பு காரீப்-2019 பருவத்தில் ஏக்க ருக்கு மக்காச்சோளப் பயிருக்கு ரூ.528-ம், துவரை மற்றும் உளுந் துப் பயிருக்கு ரூ.311-ம், நிலக் கடலை பயிருக்கு ரூ.555-ம், ராகி மற்றும் எள் பயிருக்கு ரூ.246-ம்  காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களை பொருத்த வரையில் ஏக்கருக்கு வாழை பயிருக்கு ரூ.4021-ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1655-ம், வெங்காய பயிருக்கு ரூ.1885-ம், மஞ்சள் பயிருக்கு ரூ.3641-ம், வெண்டைக்காய்பயி ருக்கு ரூ.491-ம், முட்டைக் கோஸ்  பயிருக்கு ரூ.911-ம், உருளைக் கிழங்கு பயிருக்கு ரூ.2129-ம், கொய்யாவுக்கு ரூ.1087-ம் மற் றும் மாமரத்திற்கு ரூ.1003-ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்கள்

நில ஆவணங்களான சிட்டா மற்றும் அடங்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார்நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் “விதைப்பு செய்ய இருக்கிறார்” என்ற விதைப்பு சான்று (விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல்) ஆகியவை காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்களாகும் விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இத்திட் டத்தில் பதிவு செய்யவோ அல்லது வேறு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. குறிப்பாக பொது சேவை மையங்கள் ஆவ ணங்களை ஸ்கேன் செய்ய கூடு தல் தொகை வசூலிப்பதாக புகார் கள் வருகின்றன. அவ்வாறு வசூ லிக்கக் கூடாது. மீறினால் சம்பந் தப்பட்ட பொது சேவை மையத் தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

கடைசி நாள்
வெண்டைக்காய் பயிருக்கு வரும் ஆகஸ்டு மாதம் 31ம் தேதி யும், மற்ற அனைத்துப் பயிர்க ளுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதியும் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இறுதிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத் தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் கதிர வன் தெரிவித்துள்ளார்.