tamilnadu

img

பொய்களை மட்டுமே கூறி ஆட்சி நடத்தியவரை தூக்கி எறிவோம் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள்

கோவை, ஏப்.13-2014ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் துவங்கி ஆட்சி முடியும்வரை பொய்களை மட்டுமே பேசிவந்த பிரதமரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வாய்ப்பு தாருங்கள் என கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் சனியன்று பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பன்னீர் மடையில் துவங்கிய பிரச்சாரம் ராமநாதபுரம், மடத்தூர், நஞ்சுண்டாபுரம், தடங்கம்,வீரபாண்டி, ஆனைகட்டி, பெரியதடாகம் வழியாக கணுவாய் மலை அடிவாரப் பகுதியில் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், 2014 ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் பொய் பேசத் துவங்கிய பிரதமர் மோடி, ஆட்சி முடியும் வரை அதுதொடர்ந்து கொண்டுதான் இருந்தது. முதலில், நான் டீக்கடைக்காரன் எனத் துவங்கி, பட்டம் படித்ததாகவும், மனைவி இல்லை என்று கூறியதிலிருந்து தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்துமே பொய்யான வாக்குறுதிகளாக இருந்து வந்துள்ளது.


மேலும், 15 லட்ச ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என எனக்கூறி ஆட்சிக்கு வந்தவுடன், ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்த பணத்தை அபராதம் என்ற பெயரில் பிடுங்கிக் கொண்டார். அதேபோல் படித்த இளைஞர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று கூறிய மோடி, பின்னர் பக்கோடா விற்பதும் வேலைதான் எனஇளைஞர்களை கேவலப்படுத்தினார். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன்மூலம் தொடர்ந்து பொய் பேசிக் கொண்டிருக்கிற மோடி அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் எனவாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் மேலும், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் வாக்கு சேகரிப்பின்போது ஆனைகட்டி பகுதியில்18 மலைவாழ் மக்கள் வசிக்கும்கிராமங்கள் உள்ளது. அம்மக்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரவும், வீடுகளை மறு சீரமைப்பு செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


வீடு இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா பெற்றுத் தரப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார் முன்னதாக, இந்த பிரச்சாரபயணத்தில் திமுகவின் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர்சி.ஆர்.ராமச்சந்திரன், சரவணம்பட்டி பகுதிப் பொறுப்பாளர் பையா கவுண்டர், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் அறிவரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதன்குமார், மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத் தலைவர் ஆர். விசி நடராஜ், துணைத் தலைவர் குணசேகரன், மதிமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, வேலுசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய பொறுப்பாளர் தேவராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், சுந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் யு.கே. வெள்ளியங்கிரி, கே.சி.கருணாகரன் மற்றும் பாலாமூர்த்தி, கேசவமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் இதைத்தொடர்ந்து மாலையில் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வட்டமலை பாளையத்தில் பிரச்சார இயக்கம் துவங்கி செங்காளிபாளையம், மணியகாரம்பாளையம், இடிகரை, வெள்ளம் மடை வழியாக கீழநத்தம், லட்சுமி கார்டன், குரும்பபாளையம், கோவில்பாளையம் வழியாக வந்து கைக்கோல் பாளையத்தில் நிறைவடைந்தது. இந்த பிரச்சார பயணத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி, மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, சிவா, பாலகுருசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளர் சுதாகர், காங்கிரஸ் வட்டார தலைவர் நாகராஜ், பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர். கோபால், புனிதா, விஜயலட்சுமி, சண்முகம், சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

;