கோவை, ஆக. 5- தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வு களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திங்களன்று வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்திய மருத்துவ ஆணை யத்தை கலைத்துவிட்டு புதிதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோ தாவை மத்திய அரசு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாண விகள் வகுப்புகளை புறக்கணித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, தேசிய மருத்துவ ஆணைய மசோதா தரமற்ற மருத்து வர்களை உருவாக்கும். மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தேவையற்றது என கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கைகளில் பதாகை களை ஏந்தி முழக்கங்களை எழுப்பி னர்.