திருப்பூர், ஜன. 3- குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் காவல்துறை தடையை மீறி ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியலில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத் தைக் கண்டித்தும், ரத்து செய் யக்கோரியும் நாடு முழுவதிலும் பல்வேறு அமைப்பினர் போராட் டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகத்தினர் தடையை மீறி ரயில் மறியல் போராட்டமானது அறிவிக்கப் பட்டிருந்தது. இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருப் பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்நிலை யில் ஆர்ப்பாட்டம் துவங்கிய சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறை தடையை மீறி ரயில் நிலை யத்திற்குள் புகுந்து தண்டவா ளத்தில் இறங்கி மறியலில் ஈடு பட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப் படுத்த முயன்ற போது காவல் துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக அறி விக்கப்பட்டது. இதற்கிடையில் செரங்காடு பகுதியை சேர்ந்த சேக்பரீது என்ற இளைஞரை போலீசார் தாக்கியதாகவும், இதனால் அவர் கைகளில் காயமடைந் துள்ளதாகக் கூறி தமுமுகவினர் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து தடை பட்டது.