tamilnadu

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை, அக்.10- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கு இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, குழந்தைக ளுக்கான  இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (உ)- இன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனி யார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப் பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பு களில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக் கீட்டின்படி சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில், கோவை யில் கடந்த மாதத்தில் முதற்கட்ட சேர்க்கை நடைபெற்றது.  இந்நிலையில், தற்போது நிரப்பப்ப டாமல் உள்ள காலியிடங்களுக்கு இரண் டாம் கட்ட சேர்க்கை வருகின்ற அக்.12  ஆம் தேதி முதல்  நவ. 7 ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  ஆகவே, கோவை மாவட்டத்திலுள்ள பெற் றோர்கள் இதற்கு தகுதியான தங்களது குழந் தைகளை 25 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ்  பள்ளி கல்வித்துறையின் இணையத ளத்தில் (rte.tnschools.gov.in) இணைய வழியாக மேல் குறிப்பிட்டுள்ள தேதி வரை  விண்ணப்பிக்கலாம் எனவும், நிர்ண யிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.