tamilnadu

img

சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடுக

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பிரச்சார இயக்கம்

தருமபுரி, மார்ச் 13- சத்துணவு திட்டத்தை தனியா ருக்கு தாரைவார்க்கும் முயற்சியை  கைவிடக்கோரி தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளியன்று தருமபுரியில் பிரச்சார இயக்கத்தை துவக்கினர்.  தமிழகம் முழுவதும் சத்துணவு திட்டத்திற்காக 43 ஆயிரம் மையங் களில் 55 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலை உணவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என  சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற் காக 43 ஆயிரம் சத்துணவு மையங் களிலும் சமையல் அறை நவீனமய மாக்கப்பட்டு அதற்கான கட்ட மைப்பு முறையாக உள்ளது. இந் நிலையில் பெங்களூரை தலை மையிடமாகக் கொண்ட இஸ்கான் அமைப்பின் அக்சயபாத்ரா பவுன் டேசன் என்ற தனியார் அமைப் பிற்கு சத்துணவு திட்டத்தை தாரை வார்க்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஆகவே, சத்துணவு திட்டத்தை  அரசு நடத்தியது போல் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு காலை உணவு திட் டத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். சத்துணவு திட்டம்  தனியாருக்கு தாரைவார்க்கப் பட்டால் 1.25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை  ஏற்படும். எனவே, தமிழக அரசு சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கை விடவேண்டும் என வலியுறுத்தி தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு  வெள்ளியன்று  தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இப்பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ் செழியன், நிர்வாகிகள் கே. கணேசன், ஆர்.காந்தன், கே.ஆறு முகம், மாதம்மாள், எம்.ஜெயந்தி, பி. வளர்மதி, ரீனா  ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.