புதுதில்லி, ஜன.14- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டம் பாரபட்சமானது மற்றும் அரச மைப்பு சாசனத்திற்கு விரோதமானது என்றும் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மக்களை பிளவுபடுத் தும் இந்த சட்டத்திற்கு எதிராக நீதி மன்றத்தை அணுகியுள்ள முதலாவது மாநிலம் கேரளமாகும். அரசமைப்பு சாசனம் 131 ஆவது பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதி ராக ஏற்கனவே கேரள சட்டமன்றத்தில் எதிர்ப்பின்றி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. குடியுரிமை சட்ட திருத்தம் திரும்ப பெற வேண்டும் என அந்த தீர்மா னத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் அரசமைப்பு சாசனத்திற்கு எதிரா னது எனவும், நாடு முழுவதும் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். குடியுரிமையில் செய்யப்பட்டுள்ள திருத்தம் மதபாகு பாடுகளுக்கு இடமளிக்கும் எனவும், வெளிநாடுகளில் வசிப்போர் மத்தியிலும் அச்சம் அதிகரித்துள்ள தாகவும், எனவே சட்டம் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானம் எதிர்ப்பின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசும் மாநில அரசும் தமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு களை அரசமைப்பு சாசன பிரிவு 131இன் கீழ் கேள்வி எழுப்ப முடியும். ஜனவரி 23-ல் குடிமக்கள் திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. இந்த சூழ்நிலையில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.