tamilnadu

img

கொரோனா பாதிப்பு தேசிய இறப்பு 2.67 % கேரளத்தில் வெறும் 0.39 %

திருவனந்தபுரம், ஜுலை 14- தேசிய அளவில் கோவிட் இறப்பு விகிதம் 2.67 என்கிற நிலையில் கேரளத்தில் இது 0.39 சதவிகிதம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கோவிட் தடுப்பில் கேரளம் மேற்கொள்ளும் முன்மாதிரிகள் பயனுள்ள வை என்பதை மரண விகிதம், நோய் பரவல், பரசோதனை, குணமடைதல் போன்றவை இதை தெளிவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். கோவிட் இறப்பில் (நூறு நோயாளிகளில் ஏற்படும் மரணம்) உலக சராசரி 4.38 சதவிகித மாகும். கர்நாடகம் 1.77, தமிழ்நாடு 1.42, மகா ராஸ்டிரா 4.16 சதவிகிதம். ஞாயிறன்று மட்டும் கர்நாடகத்தில் 71 பேரும், தமிழ்நாட்டில் 68 பேரும், மகாராஸ்டிராவில் 173 பேரும் உயிரி ழந்தனர். ஆனால் கேரளத்தில் 2 உயிரிழப்பு மட்டுமே. கேரளத்தில் நோய் தொற்று உறுதி யாவது (Test Positive) 2.27 சதவிகிதம். தேசிய அளவில் இது 7.46 சதவிகிதம், கர்நாடகாவில் 4.53, தமிழ்நாட்டில் 8.57, மகாராஸ்டிராவில் 19.25, தெலுங்கானாவில் 20.6 சதவிகிதம். 44 பேருக்கு பரிசோதனை நடத்தும்போது கேர ளத்தில் 1 நோயாளி. ஒருவாரம் முன்புவரை இது 50 க்கும் அதிகத்தில் ஒன்றாக இருந்தது. இதில் தேசிய சராசரி 13 என முதல்வர் சுட்டிக்காட்டினார்.