tamilnadu

img

குஜராத்: சாலைவிபத்தில்  7  பேர் பலி

குஜராத் சாலைவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
குஜராத் மாநிலம் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் பட்டி பகுதியில் வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியது.  இந்த விபத்தில், கார் நொறுங்கி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. லாரியின் முகப்பு சேதமடைந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;