tamilnadu

img

எப்போது விரட்டுவார்களோ? என்ற அச்சத்தில் மந்தைபுர மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஊராட் சிக்குட்பட்டது அன்னியாளம் கிராமம்.  கிராமத்தில் உள்ள  சாலை யோரம் மந்தைபுரம் பகுதியில்  30 ஆண்டுகளாய் 70க்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்,  குடிநீர், சிமெண்ட்  சாலை ஒன்று, ஆதார், ரேசன், வாக்காளர் அட்டைகள், சில வீடுக ளுக்கு மின்சாரம், அரசு இலவச கழிப்பறைகள் உள்ளன. இவை எல்லாம் இருந்தாலும்  உயிர் வாழ்வ தற்கு ‘தண்ணீர்’ எவ்வளவு முக்கிய மோ அதுபோல் குடியிருக்கும் வீட்டிற்கு ‘பட்டா’ அவசியம்.  மந்தைபுரம் பகுதியில் இருப்ப வர்களுக்கு பட்டா இல்லாததால் எப்போது இங்கிருந்து விரட்டு வார்களோ என்ற அச்சத்திலேயே இவர்கள் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு கூட கிராம நிர்வாக அலுவலர்  ‘உங்க ளுக்கு வேறு இடத்தில் வீடு தருகி றோம். இந்த இடத்தை காலி செய்யுங்  கள்’ எனக் கூறியுள்ளார்.  பட்டா இருந்தால் நம்மை இப்படி அரசு அலட்சியமாக நடத்துவாங்களா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பு கின்றனர். ‘25 ஆண்டுகளாய் புறம்போக்கு இடத்தில் இருப்பவர்கள் ஓட்டு, சீட்டு, குடிசை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையை ஓட்டவோ, வீடு கட்டவோ பணம் எங்காவது கேட்டால், ‘பட்டா’ இருக்கிறதா என்ற கேள்விதான் முதலில் கேட்கப் படுகிறது. இதனாலேயே இவர்களை தள்ளிவைத்து விடுகின்றனர். எனவே இவர்களை ஒதுக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க வேண்டும்’ என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன். ‘பட்டா கேட்டு கால் தேய நடந்தாலும், இவர்களுக்கு பட்டா கிடைத்தபாடில்லை. ஏழை மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பதை தவிர மாவட்ட நிர்வகாம் வேறு எந்த மாற்றத்தையும் இங்கு செய்ய முன்வருவதில்லை’  அன்னியாளம் கிளைச் செயலாளர் காத்தவராயன். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ், வட்டச் செயலாளர் வெங்கடேஷ், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அனுமப்பா ஆகியோர் கூறுகையில், ‘தேன் கனிக்கோட்டை வட்டத்தில் பட்டாக்கள் இல்லாத  மக்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு, பட்டாக்கள்  2018 ஆகஸ்ட் மாதத்தி லும், 2019 நவம்பர் மாத்திலும்  மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில்  மாவட்ட ஆட்சியர், வட்டாட் சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி,  மனுக்கள் கொடுக்கப்பட் டது. அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில், குடியிருக்கும் இடத்திற்கு தேவைக்கேற்ப நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டாக்கள் வழங்கப்படும் எனக் கூறினர். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் இதற்காக சிறு முயற்சி  கூட எடுக்கவில்லை’ என்கிறார்கள். மேலும், தேன்கனிக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள நிழற்குடை எப்போது இடியும் என்ற நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பெரிய விபத்துக்கள் ஏதாவது நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஓசூர் சாலை விரிவாக்கப்பட்ட போது மாசிநாயகனப்பள்ளி அருகில்  பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டி 3 மாத்திலேயே  4 இடங்களில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். தரமான பாலம் கட்ட தவறிய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறுகின்ற னர். எனவே தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஏற்பட்டுள்ள பட்டா பிரச்சனையையும், நியற்குடை, மேம்பாலம் பிரச்சனைகளை  மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வுகான வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. - ஓய்.சந்திரன்