tamilnadu

img

அசோக்லேலண்டு தொழிலாளி பஞ்சாயத்து தலைவராக தேர்வு

கிருஷ்ணகிரி, ஜன.6- ஓசூர் வட்டம், அச்செட்டிப் பள்ளி ஊராட்சிக்கு அசோக் லேலண்டு 1 ல்  பணிபுரியும் சு.சீனிவாசரெட்டி ஊராட்சித் தலைவராக அதிக வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், வார்டு உறுப்பினர்களாக சந்திரப்பா, மல்லையா, முனி ராஜ், நந்தினி ரேகா, சவீதா, உஷாராணி, கோதண்ட ராமா, அஸ்வத்தம்மா ஆகி யோர் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து திங்களன்று (ஜன.6)  ஊராட்சி மன்ற அலுவல கத்தில் உதவி தேர்தல் அலுவலர் சதீஷ் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். ஊராட்சி செய லாளர் மாதேஷ் உடனி ருந்தார்.  ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ள சு.சீனி வாச ரெட்டி, ‘கடந்த 15 ஆண்டுகளாக மிக மோச மாக உள்ள அச்செட்டிப் பள்ளி தார்ச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இஸ்லாமியர்களின் கோரிக்கைக்கு இனங்க மயானத்திற்கு பட்டா வழங்கவும், ஊராட்சி முழுவதும் தெருவிளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளி யின் தரம் உயர்த்தப்படும்’ என்று கூறினார். 500 பள்ளி மாணவர்க ளுக்கு இலவச சீருடையும், வழங்கியுள்ளார், பேகே பள்ளி, நல்லூர் பள்ளி களுக்கு 2 வகுப்பறைக ளையும் கட்டிக் கொடுத்துள் ளார் சு.சீனிவாச ரெட்டி. மேலும், சூதாளம் பள்ளிக்கு கணினியும் வாங்கிக் கொடுத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக சமூக சேவை யில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற தால், ஊராட்சிக்குத் தேவை யானதை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு உள்ளது.

;