tamilnadu

img

டாம்பேவுக்கு ஐபிஎல்-லில் பங்கேற்கத் தடை

நாட்டின் முதல் தர போட்டியில் மூத்த வீரராக விளையாடி வரும் மும்பையைச் சேர்ந்த பிரவீன் டாம்பே (48) ஓய்வு முடிவு அறிவிக்காமல் அபுதாபியில் நடைபெற்று வந்த 10 ஓவர்களை கொண்ட தொடரில் (2019-ஆம் ஆண்டு தொடரில்) விளையாடியுள்ளார்.  இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதி மீறிய செயல் என்பதால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் டாம்பே ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சுழற்பந்துவீச்சாளரான பிரவீன் டாம்பே ஐபிஎல் தொடரின் 2020 சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ளார். பிசிசிஐயின் திடீர் தடை உத்தரவால் கொல்கத்தா அணி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.  

என்ன பிரச்சனை?

பிசிசிஐ விதிப்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர் ஓய்வு முடிவை அறிவிக்காமல் (உள்ளூர் தொடரை தவிர) வேறு நாட்டு உள்ளூர் தொடர்களில் விளையாடக் கூடாது. பிரவீன் டாம்பே விதிகளை மீறி டி-10 தொடரில் விளையாடியுள்ளார். இது பிசிசிஐ விதிகளுக்கு முரணானது என்பதால் டாம்பே  நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேலும் டாம்பே நீக்கத்தை உறுதி செய்துள்ளார்.  
 

;