கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கு நடுவராக செயல்படவுள்ளார்.
கடந்த 2016ல் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக செயல்பட்டார். இதைத்தொடர்ந்து, தற்போதுவரை அவர் 15 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். இவர் வரும் சனிக்கிழமை ஓமன் மற்றும் நமிபியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறும் உலக கிரிக்கெட் லீக் பிரிவு-2 ஒருநாள் போட்டியில் முதல்முறையாக நடுவராக களம் இறங்கவுள்ளார். இவரது வருகைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பாராட்டையும் தங்களின் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.