பாவலர் ஓம் முத்துமாரி, கிராமியக் கூத்துக்கலையில் சுமார் 45 ஆண்டு காலம் தடம்பதித்த, இடது சாரி - முற்போக்கு கலை இலக்கிய மேடைகளில் இயங்கிய கலைஞர். இவர் , தமிழக அரசின் கலைமணி, கலைச்சுடர் விருதுகளைப் பெறாமலே நேரடியாக கலைமாமணி விருது பெற்ற ஒரே கலைஞராவார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த ஓம் முத்துமாரி,மதுரையில் பி.ராமமூர்த்தி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வீதி வீதியாக கலைப் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தியவர். தனது இறுதி மூச்சு வரை தமுஎகச வில் ஓர் உறுதிமிக்க அங்கமாக தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர். தமுஎகசவின் மாநிலக்குழுவிலும் திருநெல்வேலி மாவட்டக்குழுவிலும் உறுப்பினராக செயல்பட்டவர்.பாவலர் ஓம் முத்துமாரி- கிராமங்கள் தோறும் நடத்தப்படும் கூத்தில் மக்களின் நிலை குறித்து பாடும் பாடல் ஒன்று:“கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்கிறான் நாட்டுல-நீகொறட்டை விட்டுத் தூங்காதப்பா வீட்டுலநாட்டத் திருத்தி நல்ல வழியில் நடக்க வழி தேடு-நீஇராப்பகலா பாடுபட்டும் கிடைக்கலயே சோறு”- (தம்பி கூட்டுச் )தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் கலைமாமணி விருது பெற்ற ஓம் முத்துமாரி, தமுஎகசவால் முற்போக்கு முன்னணிக்கலைஞர் என்று பட்டம் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பாவலர் என்று தனது தோழர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஓம் முத்துமாரி, நாட்டுப்புறக் கலைச்சுடர், நவரசக் கலைஞர், இசை நாடக நகைச்சுவைக் கலைஞர், கிராமியக் கலைச்சக்கரவர்த்தி, கலை முதுமணி, மரகதமணி என்பது உட்பட பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் திருவேங்கடத்தில் வசித்து வந்த ஓம் முத்துமாரி, 2013 நவம்பர் 14, 2013 இல் காலமானார்.\
===பெரணமல்லூர் சேகரன்==