tamilnadu

img

ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்க இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 

பாக்தாத் விமான நிலையத்தில், அமெரிக்கா இன்று அதிகாலை நடத்திய வான் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான காசிம் சுலைமானி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவுப்படிதான் நடந்தது என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அறிவித்தது. இதை அடுத்து, ஈரானின் இதயம் காயமடைந்துள்ளதாகவும், அமெரிக்காவின் இந்த கொடூரமான குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரொஹானி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், சர்வதேச சந்தையில் சச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரெண்ட் (brent) சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.4 சதவீதம் அதிகரித்து, 69.16 டாலராக அதிகரித்தது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் சந்தையில் 4.3 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, 63.84 டாலராக அதிகரித்தது. இதன் காரணமாக இந்திய, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து, பங்குகள் விலை குறைந்தன. 

;