tamilnadu

img

பெரியார் சிலை உடைப்பு  - காவல்துறை விசாரணை

செங்கல் பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 
துக்ளக் பத்திரிகையின் 50 வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பெரியாரின் கருத்துகள் மீது ஆர்வம் உடையவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கத்தில் உள்ள பெரியார் சிலை அடையாளம் தெரியாத நபர்களால்  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில் சிலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.