tamilnadu

பல கோடி ரூபாய் மதிப்பிலான உலோக சிலை மீட்பு... 2 பேர் கைது...

மாமல்லபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பூதேவி உலோக சாமி சிலை மீட்கப்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலை பக்கிங் காம் கால்வாய் அருகே சிலை கடத் தல் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.நெருப்பூரில் கையில் பையுடன் வந்த இருவரை மடக்கி உரிய ஆவணங்களின்றி அவர்கள் வைத்திருந்த  பூதேவி உலோக சிலையை பறிமுதல் செய்து விசாரித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான வேல்குமார், செல்வம் ஆகிய இருவரும் சிலையைக் கைமாற்றிவிட சென்ற தகவலறிந்து அவர்களைக் கைது செய்தனர்.பூதேவி சிலை எந்தக் கோவிலில்  திருடப்பட்டது, யார் திருடியது என்று தொடர் விசாரணையில் காவல்துறை யினர் ஈடுபட்டுள்ளனர்.