மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையை பார்க்க இனி கட்டணம் வசூலிக்கப்படும் vdஎன அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மோடி ஜிஜின் பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றதைத்தொடர்ந்து சுற்றுல்லா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏற்கனவே கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வெண்ணெய் உருண்டை பாறையை வெளிநாட்டவர் பார்க்க ரூ.600 கட்டணமும், உள்நாட்டு பயணிகளிடம் ரூ. 40ம் வசூலிக்கப்படும் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.