tamilnadu

கரூர் , தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி வங்கி ஊழியர் பலி
கரூர், செப்.11- கரூர் மாவட்டம் வாங்கல் காவல் சரகம் எல்லைக்குட்பட்ட புதுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் குளிப்பதற்காக கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ராயனூர் பகுதியில் செயல்படும் பல்லவன் கிராம வங்கியில் பணியாற்றி வந்த சூரிய பிரகாஷ்(23) இவரது நண்பர் கார்த்திக் ராஜா வயது 19 தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதே போல் அவரது நண்பர் அக்பர் உசேன் (20). இவர்கள் 3 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் அக்பர் உசேன் மட்டும் குளிப்பதற்கு ஷாம்பு வாங்க கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காவிரி ஆற்றில் பார்க்கும்போது, வங்கி ஊழியர் சூரிய பிரகதீஸ்சும், கல்லூரி மாணவர் கார்த்திக் ராஜாவும் நீரில் மூழ்கி பலி யானது தெரியவந்தது. இவர்களில் வங்கி ஊழியர் சூரிய பிரகதீஸ் உடல் மட்டும் மீட்கப்பட்டது. கல்லூரி மாணவனின் உடலை தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி மாறுதல் உத்தரவால் மாரடைப்பு கும்பகோணம் ஆசிரியை மரணம்
கும்பகோணம் செப்.11- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தேசிய இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய் விற்குப் பின் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரம்பப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதற்காக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்றிருந்த போது, திடீரென ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 20 பேரிடம் பணிநிரவல் திட்டத்தின் கீழ் பணி மாறுதல் உத்த ரவை கல்வி அதிகாரிகள் கொடுத்தனர். இந்நிலையில் திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 20 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றிய ம.லதா(49) பணி நிரவல் கார ணமாக பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டதாக உத்தரவு வழங்கப்பட்டது.  உத்தரவு தகவல் பார்த்த ஆசிரியர் லதா மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு நின்ற நிலையில் சரிந்து கீழே விழுந்தார். கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஆசிரியை லதா மரண மடைந்தார். தகவலறிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர்,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராம லிங்கம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் செழியன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள்-ஆசிரியர்கள்-பொது மக்கள்- மாணவ - மாணவிகள் ஆசிரியை லதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அஞ்சலி செலுத்த வந்த மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தலை வர்கள், தமிழக அரசின் ஆசிரியர் விரோத கொள்கையால் ஆசிரியை மரணமடைந்துள்ளார். இதில் நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

;