சிதம்பரம், பிப். 9- கடலூர் மாவட்டம் சிதம் பரத்தை அடுத்த 11 கிமீ தூரத்தில் மதுராந்தகநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு திருக்குளம், ஆழங்காத்தா குளம், மொளலி குளம் உள்ளிட்ட மூன்று குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் மூலம் அந்த ஊரின் குடிநீர் தேவை பூர்த்தியானது. மேலும் நிலத்தடி நீரும் பாது காக்கப்பட்டன. தற்போது இந்த குளங்கள் தூர்ந்து குளங்கள் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளன. மேலும் சிலர் குளங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, பொதுமக்கள் குடி நீருக்காக அலைய வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த கிருஷ்ண மாச்சாரி என்பவர் குளங்க ளில் டாஸ்மாக் மதுபாட்டில் கள், பிளாஸ்டிக் கப்புகள், தண்ணீர் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. நிலத்தடி நீர் கொஞ்சம் உப்பாக மாறியதால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் அமைக்கப்பட்டது. ஆனால் அமைக்கபட்டதோடு அது அப்படியே கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தனச்செல்வி என்ற பெண் கூறுகையில், ஊரில் கழிப்பிடத்திற்கு செல்ல இடமில்லை. இதனால் ஆண், பெண் என அனை வரும் சாலையின் இரு புறமும் இருட்டு நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை கனிவுடன் நிறைவேற்றுமா?