tamilnadu

img

தோழர் துரைராஜ் படம் திறப்பு: கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு....

கடலூர்:
மார்க்சிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பொறுப்புகளை வகித்து வந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவருமான தோழர் எஸ்.துரைராஜ், மார்க்சிஸ்ட் கட்சியில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக உழைப்பாளி மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட போதும், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்த்தும் உறுதியாக கண்டவர் தோழர் எஸ்.துரைராஜ் என்றால் மிகையாகாது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பண்ருட்டியில் நடைபெற்ற அவரது படத்திறப்பு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பண்ருட்டி நகரச் செயலாளர் ஆர்.உத்திராபதி, பண்ருட்டி ஒன்றியச் செயலாளர் கே.தனபால், அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் ஆர்.லோகநாதன்,  நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் எம்.ஜெயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தோழர் துரைராஜ் படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் உரை நிகழ்த்தினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், மூசா, பி.ஜான்சிராணி, ஜி.மாதவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் இ.சங்கர், சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பி.துரை, மதிமுக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜி.காமராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் டி.சண்முகம், மாவட்டச் செயலாளர் வீரப்பன். திமுக அண்ணாகிராமம் ஒன்றிய முன்னாள் செயலாளர் பலராமன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடலூர் மாவட்டத் தலைவர் ஸ்டார் சவுக்கத் அலி, தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் ஷேக் நூறுதீன், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி நகர செயலாளர் யாஸீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் ராஜா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினர். என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ஜெயராமன் நன்றி கூறினார்.

;