tamilnadu

img

‘நிவர்’ புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு.... விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு

கடலூர்:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவானது. ‘நிவர்’ என்று பெயரிடப்பட்ட புயல் புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர்தொலைவிலும் சென்னைக்கு வடமேற்கில் 110 கிலோமீட்டர் இந்தப் புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. அதன்படி புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு மேல் கரையைக் கடந்து சென்றது.

வெள்ளத்தில் கடலூர்...
புயல் கரையை கடக்கத் துவங்கியதி லிருந்து கடலூர் மாவட்டத்திலும் புதுச்சேரி யிலும் கன மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 27 சென்டிமீட்டர் மழை பெய்ததால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது.
புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாமல்லபுரம் மற்றும் மரக்காணம் அருகே ஆலம்பாறை குப்பம்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். காவல்துறை, துணை ராணுவ பேரிடர் மேலாண்மை படை,  தீயணைப்பு வீரர்கள் கடலோர மாவட்டங்கள் முழுவதும் ரோந்து பணியில் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.புதுவை அரசும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.

முடங்கியது...
கடந்த இரண்டு நாட்களாக புயலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள்குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகிறார்கள். முதல் கட்டமாக 3 பேர்உயிரிழந்தது குறித்து தகவல் கிடைத்துள்ளது. சில இடங்களில் மரங்கள் வேரோடுசாய்ந்தது ஆடு மாடுகள் அடித்துச்செல்லப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. ஆனாலும், முழுமையான தகவல் கிடைத்ததும் புள்ளி விபரங்களுடன் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர்...
நிவர் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர்சூழ்ந்தது. வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து வியாழனன்று கடலூர் சென்றார்.அங்கு கடலூரை அடுத்த ரெட்டிச்சாவடிபகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு முதல்வர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்க ளிடம் குறைகளை கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து தேவனாம் பட்டினம் நடுநிலைப் பள்ளியில் தங்கியிருந்த 120 மக்களுக்கு புயல் நிவாரண உதவிகளை வழங்கினார்.பின்னர் கடலூர் முகத்துவாரத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்டார். அங்கிருந்து கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றார். அங்கு அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், வேளாண் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆகியோர் உடனிருந்தனர். 

144 மின்கம்பங்கள் பாதிப்பு - ரூ.1.5 கோடி இழப்பு
சென்னை மின் வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலின் போது மின்வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை” என்றார்.
மாநிலம் முழுவதும் இதுவரை 144 மின் கம்பங்களும், 10 உயர்மின் அழுத்த கம்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. துணைமின் நிலையங்கள், உயர்மின் அழுத்த கடத்திகள் ஆகியவற்றுக்கு பாதிப்பில்லை. நிவர் புயலால் மின்வாரியத்திற்கு 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.புயலின் பாதிப்பு நீங்கியதால் மின் வினியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பயிர்களுக்கு இழப்பீடு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில், நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இது குறித்து அதிகாரிகளுக்கு கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் 1617 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல், 315 ஹெக்டேர் மணிலா, 35 ஹெக்டேர் வாழை,8 ஹெக்டேர் மரவள்ளி பயிர்ச் சேதமடைந்தஇருப்பதாக முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இன்னும் முழுமையாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.கடலூர் மாவட்டத்தில் 77 மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முத லமைச்சர் தெரிவித்தார். 

;