கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கஜகஸ்தானின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. 95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்த அந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. விமானத்தின் ஒரு பகுதி நொறுங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.