சென்னை,ஜன.31- போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, 95 லட்சம் ரூபாய் பண மோசடி செய்துவிட்டதாக அளிக்கப்பட்ட புகார் மீதான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 4 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி யில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவ தாக 95 லட்சம் ரூபாய் பண மோசடி செய்து விட்டதாக 16 பேர் புகார் அளித்தனர். இந்த புகா ரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் 2018 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதில் செந்தில் பாலாஜி முன்ஜாமீனில் இருக்கும் நிலை யில், குற்றச்சாட்டுக்கு ஆளான மேலும் 5 பேர் கைது செய்யப்பட்ட னர்.
இந்த வழக்கு விசாரணை யின் ஒரு பகுதியாக தற்போது செந்தில் பாலாஜி திமுகவில் உள்ளதால் அவரது வீடு, அலுவ லகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வெள்ளியன்று(ஜன.31) சோதனை நடத்தினர். சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டியிருந்த தால், அதை சீல் வைத்தனர். பிறகு, வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றத்தின் அனுமதியை பெறும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி, ராம கிருஷ்ணபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்தி லுள்ள அலுவலகத்திலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் சோதனை நடத்தியது குறித்த தகவல் பரவிய தும் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் இருக்கும் பகுதியில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டனர். ராமகிருஷ்ணபுரம் அலுவலகத்தை திறந்து சோதனை செய்ய முற்படும் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலை மறித்தபடி திமுக பெண் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். பக்கத்து வீட்டின் வழியாக செந்தில் பாலா ஜியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற சென்னை காவலர்க ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையி னரை கண்டித்து கோஷங்களை திமுகவினர் எழுப்பினர்.