சென்னை, ஆக. 13- தேர்வுக் கட்டணம் உயர்த்தியது ஏன் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. நிர்வா கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது:- தேர்வுக் கட்டணம் ஏதோ தில்லிக்கு மட்டும்தான் அமல்படுத்தப்பட்டதாக தவ றாக கூறப்படுகிறது. இந்த கட்டணம் நாடு முழுவதும் பொருந்தும். கடந்த 5 ஆண்டுகளுக்கு இடையில் தேர்வுக் கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு இப் போதுதான் உயர்த்தப் பட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளி நாடுகளில் சி.பி.எஸ்.இ. நிர் வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டணத்தை உயர்த்த சி.பி.எஸ்.இ. ஆட்சிமன்றக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. ஒரு பாடப்பிரிவுக்கு ரூ. 150 வீதம் 5 பாடங்களுக்கு ரூ. 750 என்று இருந்த தேர்வுக் கட்டணத்தை, தற்போது ஒரு பாடத்துக்கு ரூ.300 என்ற வீதத்தில் 5 பாடங்களுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டி ருக்கிறது.
கண்பார்வையற்ற மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத் தின் இந்த கட்டண உயர்வு மற்ற மத்திய கல்வி வாரி யத்தை விட குறைவு தான். தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் (என்.ஐ. ஓ.எஸ்.) பொதுப்பிரிவு மாண வர்களுக்கு ரூ.1,800, மாணவி களுக்கு ரூ.1,450, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 1,200 என மேல்நிலை தேர்வுக் கட்டணமாகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், மாணவிகளுக்கு ரூ.1,750, எஸ்.சி., எஸ்.டி. பிரி வினருக்கு ரூ.1,300 என உயர் நிலை தேர்வு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் பாடப் பிரிவுகளுக்கும் ரூ.720-ம் வசூலிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இது லாபம், நஷ்டம் அடிப்படை யில் செயல்படாது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.