tamilnadu

img

சிபிஎம் புத்தாண்டு வாழ்த்து

மதச்சார்பற்ற இந்தியாவின் பன்முகப்  பண்பாட்டை  காப்பதற்கான  போராட்டத்தை நடத்துவோம்

சென்னை,டிச.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர மோடி அரசு நாட்டை பெரும்  அழிவுப்பாதையை நோக்கி நடத்திச் செல்வதற்கு சாட்சிய மாகவே 2019 ஆம் ஆண்டு அமைந்தது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை ஒட்டச்சுரண்டுகிற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது  மத்திய பாஜக அரசு. நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் அதிகரித்துள்ள வேலையின்மை உள்ளிட்டு பல்வேறு நெருக்கடியில் சிக்கி யுள்ள இந்தியப் பொருளாதாரத்தை இடது சாரிகள் முன்வைக்கும் மக்கள் நலன் காக்கும் மாற்றுத் திட்டத்தின் மூலமாகவே சரி செய்யமுடியும். அதற்கான போராட்டங் களை மேலும் தீவிரப்படுத்தும் ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும். 

பன்முகப் பண்பாடுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த பண்பாடாகும்.  நாட்டின் மதச் சார்பற்ற அரசியல் சாசனத்தை தகர்க்கும் பல்வேறு சதி வேலைகளில் மோடி அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உச்சகட்ட தாக்குதல்தான் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு என  அடுத்தடுத்து அறிவிக்கப்படும் நடவடிக்கை கள் ஆகும். மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாசகர கனவான இந்துத்துவா நாடாக மாற்றும் இத்தகைய முயற்சிகளை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்து போராடி வருவது நம்பிக்கை விதைகளை விதைக்கிறது. தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின்  எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்கவும் தமிழகத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை நிலை நிறுத்தவும், புதிய கல்விக்கொள்கை க்கு எதிராகவும், பெண்கள் - குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கள், தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு எதிராகவும் உறுதியான போராட்டங்கள் தொடர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு  எப்படியாவது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மோடி  அரசின் எடுபிடியாக செயல்பட்டு தமிழகத்தின் நலனை காவு கொடுக்கிறது. இந்த விசு வாசத்திற்கு பரிசாக,  அனைத்துத்துறை களிலும் ஊழல் - முறைகேட்டில் ஈடு பட்டு வரும் அதிமுக அரசை, நாட்டிலேயே  தமிழகத்தில்தான் நிர்வாக ரீதியாக நல்லாட்சி நடப்பதாக சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்த உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பது புதிய ஆண்டின் பிரதான அரசியல் பாதையாகும். மக்களின் பொருளாதார உரிமைகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்கு தல்களை முறியடிக்க ஜனவரி 8 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம். மத்திய பாஜக அரசின் நாசகரப் பொரு ளாதார நடவடிக்கைகளையும், அதற்கு ஒத்து ஊதுகிற ஊழல் அதிமுக அரசின் நட வடிக்கைகளையும் மக்கள் போராட்டங்களின் மூலம் முறியடிப்போம் என்பதை இப்புத்தாண்டில் உறுதியேற்போம். தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.