முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- கொள்கை வேறு, கூட்டணி வேறு.
ச.சா - ஆனா, கட்சியையே அடகு வெக்குறதும் வேறு..!!
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்:- நமது பிள்ளைகள் மருத்துவ மாணவர்களாக அதிக அளவில் தேர்ச்சியடையாமல் போக “நீட்” தேர்வைக் கொண்டு வந்தார்கள்.
ச.சா - அப்புறம் ஏன் அத எதிர்த்து போராட மாட்டேங்குறீங்க..??
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி :- இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது.
ச.சா - இவர் இந்தியரே இல்லைனு பாஜககாரங்க சொல்லிருவாங்களே..?
தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி.மோடி :- இந்தியா முழுவதும் காலூன்ற பயங்கரவாதிகள் முயற்சி.
ச.சா - இத மாதிரி வேலைகளத் தடுக்க முடியாம அரசு இருக்குன்னு சொல்ல வர்றாரா..??