tamilnadu

img

ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா?

கே.பாலகிருஷ்ணன்  கேள்வி

சென்னை, டிச. 30- ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்க ளுக்கு ஒரு நீதியா என பாதிக்கப்பட்ட சென்னை  கல்லறை நகர் மக்களை சந்தித்தபின் கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். சென்னை தீவுத்திடல் அருகே உள்ள கல்லறை நகர், சத்தியவாணி முத்து நகர், காந்தி  நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காவல் துறை உதவியுடன் இந்த வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். எதிர்த்து போராடிய மக்களை காவல்துறையினர் தாக்கியதுடன் கைது செய்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அந்த பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், காவல் துறையால் தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் சந்தித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரியி டம் தலைமைச் செயலரிடம் பேசியுள்ளதாக வும், அவர் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தி  வைப்பதாக தெரிவித்துள்ளதாகவும் எனவே வீட்டை இடிக்கக் கூடாது  எனவும் வலியுறுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக் குழு உறுப்பினர்  ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, தாமோதரன், முரு கேஷ், எம்.வி.கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச்  செயலாளர் ஜலால் உள்ளிட்ட பலர் இருந்தனர். பின்னர் இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக  அரசும் நீர்நிலைகளை ஒட்டி வாழக்கூடிய சாதா ரண ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தலித்  மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகளை நீர்நிலை  ஆக்கிரமிப்பு என்று காரணம் கூறி தொடர்ந்து  அப்புறப்படுத்தி வருகிறது. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அப்புறப்படுத்து வதற்கான திட்டங்கள் இருப்பதாகத் தெரிய  வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.மணி அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் பேசி  இந்த பகுதியில் குடிசை வீடுகளாக இருந்த வற்றை ஓட்டு வீடாக மாற்றினார். பல ஆண்டுகளாக இந்த மக்கள் இங்கு  குடியிருந்து வருகிறார்கள். இங்கு குடியிருப்ப வர்களுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. இந்நிலையில் எந்தவித முன் அறி விப்பும் இன்றி திடீரென வீடுகளை இடிப்பது,  இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை  அநாகரிகமாக பேசுவது என்ன நியாயம்?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி இதற்கு எதிர்ப்பு தெரி வித்ததற்காக  காவல் துறையால்   கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதை  வன்மையாக கண்டிக்கிறோம். திடீரென குடியிருப்புகளை அகற்றினால் அவர்கள் வாழ்  வாதாரம் என்னாவது? மக்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து கேட்கக் கூடாது, பேசக்  கூடாது என்றால் தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த சாதாரண ஏழை எளிய மக்கள் என்ன  ஆற்றின் குறுக்கே வீடுகளை கட்டி தண்ணீர் செல்ல முடியாமல் தடுத்துவிட்டார்களா? சாதா ரண ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு,  நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்  பட்டுள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், போர்ட் கிளப் ஆகிய வற்றை இடிக்க மறுப்பதேன்? அங்கு நீர்நிலை கள் பாதிக்கவில்லையா? ஏன் அரசு பாரபட்ச மாக நடந்து கொள்கிறது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா? தலைமைச் செயலாளரிடம் இதுகுறித்து தொடர்பு கொண்டு பேசினேன். அப்புறப்ப டுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க  உள்ளதாக தெரிவித்தார். மேலும் நீர் நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி இங்கிருக்கும் மக்களை  அகற்றி 50 கி.மீ. தூரத்தில் உள்ள பெரும்பாக்கத்  தில் குடியமர்த்தினால் அவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகாதா? அவர்களின் வாழ்வாதா ரம் என்னாவது. திடீரென இப்போது குடியிருப்பு களை காலி செய்யச் சொன்னால் மாணவர்க ளின் படிப்பு பாதிக்காதா?

சென்னை நகரம் என்றால் அதில் சாதா ரண ஏழை எளிய மக்கள், தலித் உழைப்பாளி மக்கள் குடிருப்பது என்ன சட்ட விரோதமா? அரசு நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. நீர்நிலை ஆக்கிர மிப்பு எனக் கூறி 300 அடி வரை உள்ள வீடு களை அப்புறப்படுத்துகிறீர்கள். 30 அடி வரை தான் நீர்நிலை ஆக்கிரமிப்பு. எனவே அந்த  30 அடி போக மீதமுள்ள இடத்தில் அடுக்குமாடி  குடியுருப்புகளை கட்டி இவர்களை இங்கேயே  குடியமர்த்த வேண்டும். எப்படி வடசென்னை மூலக் கொத்தளம், புளியந்தோப்பு ஆகிய  பகுதியிலேயே குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்  பட்டதோ அதுபோல் அருகாமையிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;