tamilnadu

img

உத்திரபிரதேசத்தில் இன்று 50 சதவிகித கல்லூரிகள் திறப்பு

உத்திரபிரதேசத்தில் இன்று 50 சதவிகிதம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்ப்பதற்காக உயர்கல்வி  நிறுவனங்கள் முதல்கட்டமாக திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 50 சதவிகித வருகையுடன் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவியல் பிஎச்டி படிப்புகளின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அந்தந்த துறைகள் அல்லது ஆய்வகங்களில் ஆராய்ச்சி பணிகளுக்காக பார்வையிட அனுமதித்துள்ளது. வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பிஎச்யு முக்கிய குழுக்களை அமைத்துள்ளது. 
முதல் கட்டத்தில் நிலைமையை மறுபரிசீலனை செய்த பின்னர் பிற துறைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்வதாக பிஎச்யு கூறியிருந்தது.

பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் என்று பிஹெச்யூ கூறியிருந்தது. மாணவர்கள் முககவசம் அணிய வேண்டும். வளாகத்திற்குள் தனிநபர் இடைவெளி விதிமுறைகளை பராமரிக்க வேண்டும். மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைந்த பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள் என்று அறிவுறுத்த வேண்டும். அவர்கள் எல்லா நேரங்களிலும் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். விடுதியின் இயக்க பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.

கொரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.

;