ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள், பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அப்பல்லோ மருத்துவர்களின் சாட்சியம் தவறாக பதிவு செய்யப்படுவதாக கூறி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அப்பல்லோ கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.