tamilnadu

img

வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

கோபி, ஜன. 9- கோபிசெட்டிபாளையம் அருகே  உள்ள தூக்கநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் வனவிலங்குகளை வேட்டை யாட சென்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் பங்க ளாபுதூர் வனப்பிரிவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் மற்றும் வெளியாட்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தானியங்கி கேமரா வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கேமராவை செவ்வாயன்று வனத்துறையி னர் சோதனை செய்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் ஐந்து நபர்கள் வனப்பகுதிக்குள் சென்று வருவதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இந்த சோதனையின் அடிப்படையில் வனதுறையினர் தனிக்குழு அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து  வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் துப்பாக்கிகளுடன் எட காஞ்சி கொடிக்கால் வனப்பகுதியில் இரண்டு இளைஞர் கள் வந்து கொண்டிருந்ததை அறிந்து அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனைதொடர்ந்து நடத்தப் பட்ட விசாரணையில், கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புச்சாமி, கொண்டப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

;