tamilnadu

தமிழகத்தில் மின்வெட்டே இல்லையாம்:  அமைச்சர் கூறுகிறார்

ஈரோடு, ஜூன் 2-தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிற்சாலைகளில் மின்வெட்டு நிலவுவதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை. கடந்த 27 ஆம்தேதி காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் ஒருசில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும்தெரிவித்தார்.