ஈரோடு,ஜன. 26- ஈரோடு மற்றும் நீலகிரி மாவட் டங்களில், குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சியா னது மாவட்ட ஆட்சியர் முன்னிலை யில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 71-வது குடியரசு தின விழா ஞாயிறன்று வ.உ.சிதம்பரனார் பூங்கா விளை யாட்டு மைதானத்தில் நடைபெற் றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தேசிய கொடியினை ஏற்றி வைத் தார். சுதந்திர போராட்ட தியாகி கள், மொழிப்போர் தியாகிக ளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இதனைத்தொ டர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 416 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கண்காணிப்பா ளர் சக்திகணேசன், மாணவ, மாண வியர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி
இதேபோல் நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்ன சென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றி வைத்து 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், தேர்ந்தெ டுக்கப்பட்ட சிறந்த மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் ஊராட்சிய ஒன்றிய தொடக் கப்பள்ளிகளுக்கு காசோலை வழங் கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 169 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங் கப்பட்டது.