வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு, ஏப். 28-பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சனியன்று மாலை நேர தர்ணா போரட்டம் நடைபெற்றது.பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவை தொகையை வழங்கக்கோரி பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, உடனடியாக நிலுவை சம்பள தொகையினை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டஉதவி தலைவர் ஆர்.தம்பிக்கலையன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட உதவி தலைவர் சத்யா ஆகியோர் தலைமை வகித்தனர். ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் கே.பழனிசாமி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் வி.மணியன், ஈரோடு மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட துணை செயலர் எல்.பரமேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில், திரளானோர் பங்கேற்றனர்.

;