tamilnadu

img

இலங்கையில் தமிழக மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையில் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் படி ஒருமுறை கைதாகி விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு மீனவர் மீண்டும் கைதானால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். 


இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி 3வது முறையாக எல்லை தாண்டியதாக கூறி கைதான புதுக்கோட்டையைச் சேர்ந்த ராவுத்தர் என்ற மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.


இந்த நிலையில், நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.