வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நாடக நடிகர்கள் சங்க 18ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கலைமாமணி ஜூடோ கே.கே. ரத்தினத்தை தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் நாசர் கேடயம் வழங்கி கவுரவித்தார். நாடக நடிகர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.