திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

இலவச மின்சாரத்தைக் காக்க ரத்தக் கையெழுத்து போடவும் தயார்

திருப்பூர் விவசாயிகள் ஆவேசம்

திருப்பூர், ஜூலை 7 - தமிழகத்தில் இலவச மின்சாரத்தைப் பறிக்க ஒருபோதும் விடமாட்டோம். தேவைப்பட்டால் ரத்தக் கையெழுத்துப் போடவும் தயாராக இருக்கிறோம் என்று  விவசாயிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் கண்டியன்கோயில் மைதானத்தில் மத்திய அரசின் விவசாயிகள்  விரோத சட்டங்களுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் செவ்வாயன்று காலை நடைபெற்றது. இந்த இயக்கத்துக்கு கண்டியன்கோயில் ஊராட்சிமன்றத் தலைவரும், பிஏபி பாசன சபைத் தலைவருமான கோபால் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இலவச மின்சாரத்தை விவசாயிகள் போராடிப் பெற்றனர். விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டி ருக்கும் நிலையில் இலவச மின்சாரம் இருப்பதால்தான் ஓரளவு விவசாயிகள் தாக்குப்பிடித்து வருகின்றனர். இந்நிலை யில், இந்த இலவச மின்சாரத்தையும் பறிப்பதற்கு மத்திய அரசு மின்சார சட்டத் திருத்தம் 2020 கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். தேவைப்பட்டால் ரத்தக் கையெழுத்துப் பெறுவோம். உயிரைக் கொடுத்தாவது இலவச மின்சாரத்தைப் பாதுகாப்போம் என்று கூறினார்.

விவசாயிகளிடம் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று ஜூலை 7ஆம்  தேதி கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கூட்டமைப்புத் திட்டமிட்ட அடிப்படையில் கண்டி யன்கோயிலில் இந்த இயக்கம் நடை பெற்றது.  இதனைத்தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும், கூட்டுறவு சங்கங்கள், பால் சங்கங்கள் உள்பட அனைத்து பகுதிகளி லும் விவசாயிகளையும், விவசாயக் குடும்ப த்தாரையும் சந்தித்து கையெழுத்துப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.  முன்னதாக, கண்டியன்கோயில் ஊராட்சி கருங்காலிபாளையம் கிராமத்தில் ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருங்காலிபாளையம் பாலு தோட்டத்தில் கோரிக்கைத் தட்டி வைத்து, கருப்புக் கொடி கட்டி ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

;