ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவின் தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. இதை அடுத்து, முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு, பரவலாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதற்காக 3 இடங்களில் தலைநகர் அமைக்கப்படும் என்றும், அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைக்கப்படும் என கூறப்பட்டது. ஆந்திரா அரசின் இந்த முடிவைக் கண்டித்து விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திரா அமைச்சரவை கூட்டத்தில் 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அம்மாநில சட்டப்பேரவையிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.