வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

தாமரைக்கு வாக்களிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம்...

பரீதாபாத்:

பாஜகவுக்கு வாக்களிக்குமாறு, அக்கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர் தங்களுக்கு நிர்ப்பந்தம் அளித்ததாக, ஹரியானாவைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்கள் மிரட்டப்பட்டது உண்மைதான் என்று தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது.


மக்களவைக்கான ஆறாவது கட்டத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமையன்று 7 மாநிலங்களில், மொத்தம் 59 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளும் அடங்கும்.அப்போது, ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைச் சின்னத்தை அழுத்துமாறு, 3 பெண் வாக்காளர்களை பாஜக

வாக்குச்சாவடி முகவர் நிர்ப்பந்தம் செய்துள்ளார்.


இதுபற்றி சம்பந்தப்பட்ட பெண்கள்புகார் தெரிவித்து இருப்பதுடன், இதற்கு ஆதாரமாக வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது.பரீதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், கிரிராஜ் சிங் என்ற பாஜக முகவர், மேஜையில் அமர்ந்திருக்கிறார். பெண் வாக்காளர்கள் வரிசையாக அறைக்குள் நிற்கின்றனர். அப்போது,ஒரு பெண் வாக்களிக்க செல்லும் போது அவரது அருகில் செல்லும் கிரிராஜ் சிங், இந்த பொத்தானை அழுத்துங்கள் என்று நிர்ப்பந்திக்கிறார். இதேபோன்று மேலும், 2 பெண்களிடம் அவர் நிர்ப் பந்திக்கிறார். அதிகாரிகளும் கிரிராஜ் சிங்கை தடுக்காமல் இருக்கின்றனர்.


இந்த வீடியோ பதிவைத் தொடர்ந்தே, கிரிராஜ் சிங் மீது ஹரியானா தேர்தல் ஆணையம், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மே 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. கிரிராஜ் சிங் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

;