tamilnadu

img

கைநெசவு தொழிலாளர் சங்க மாநிலக் குழு கூட்டம்

அரியலூர், செப்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தை அடுத்த சின்னவளை யம் செல்லக்குட்டி திருமண மண்ட பத்தில் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார் சம்மேளன செயல்பாடு வரவு-செலவு அறிக்கையினை முன்வைத்தார். மாநில துணைத் தலைவர் பழனி யம்மாள், அரியலூர் மாவட்டச் செயலா ளர் எஸ்.என்.துரைராஜ், மாவட்டத் தலைவர் அழகுதுரை, மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் தன லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பொருளாளர் தங்க ராசு உள்பட பலர் கலந்து கொண்ட னர். கைத்தறி தொழிலாளர் சங்கத்தில் நெசவு செய்ய முடியாத நிலையில் உடல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வயது வரம்பின்றி ஓய்வூதிய தொகை யை இரட்டிப்பு மடங்காக்கி தர அரசு உத்தரவிடவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.