தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட் காட்சிகள் மூலம் ரூ.39 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் புதிய பேருந்து நிலை யம் அருகே ஞாயிறன்று அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் ரூ.13 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்து பேசுகையில், அரசு திட் டங்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள பொருட்காட்சி பய னுள்ளதாக இருக்கும். தமிழகத் தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ.39 கோடி லாபம் கிடைத்துள் ளது. காவிரி- கோதாவரி இணைப் புத்திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரு கிறது. செய்தி மக்கள் தொடர்புத் துறை அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது என்று கூறினார்.