அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகாய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் சுவாசப்பிரச்சனை காரணமாக கடந்த 1ம் தேதி தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அசாம் மாநில சுகாதாரத்துறைஅமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் சுகாதாரத்துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: மெக்கானிக்கல் வெண்டிலேஷன் உதவியுடன் தருண் கோகாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த 48 முதல் 72 மணி நேரம் மிக முக்கியமானது. சாத்தியமான அனைத்தையும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.