states

முலாயம்சிங் மனைவி சாதனா காலமானார்

லக்னோ, ஜூலை 9- சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலா யம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா சனிக்கிழமை காலமானார்.  சாதனா குப்தா நுரையீரல் தொற்று  காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்  கப்பட்டார். பின்னர் அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டார். இந்த நிலையில் சனிக்கிழமை அவர் காலமானார். சாதனா குப்தாவின் உடல் லக்னோ வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. முலா யம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும் பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ஹரியானா முதல்வர் மனோகர் லால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.