ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மக்களவை தொகுதியில் “இந்தியா” கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்ரா ராமிற்கு ஆதரவாக பாதான் நகரில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பிரம்மாண்டமான அளவில் திரண்டு ஆதரவு வழங்கினர்.