states

img

ராஜஸ்தானின் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி

ராஜஸ்தான் மாநிலம் சுருநகரில் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நாளான “வெள்ளையனே வெளியேறு” நாளில் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு, எம்எஸ்பி உத்தரவாதம், கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி அகில இந்திய விவசாய சங்கம்  சார்பில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் திரளாக பங்கேற்ற இந்த பிரம்மாண்ட பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அசோக் தவ்லே, துணை பொதுச்செயலாளர் அம்ரா ராம், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் பெமா ராம் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.