states

img

உமர்காலித் பேச்சுக்கு உபா சட்டம் கூடாது - தில்லி உயர்நீதிமன்றம்

ஜேன்யு மாணவர் உமர் காலித் பேச்சுக்கு உபா சட்டத்தை பயன்படுத்தி இருக்க கூடாது என தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
மகாராஷ்டிராவின் அமராவதியில் கடந்த பிப்ரவரியில் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து பின்னணியில் சதி செய்வதாக கூறப்படும் உபா சட்டத்தின் கீழ் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் உமர்காலித் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கில் பிணை கோரிய மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது “பேச்சு மோசமாகத்தான் உள்ளது. அதை பயங்கரவாத செயலாக பார்க்க முடியாது. நாங்கள் இதை சரியாகவே புரிந்துகொள்கிறோம். அந்த பேச்சு மிகவும் புண்படுத்தும் வகையில் இருந்தது என்பதை அரசு தரப்பு முன்வைத்துள்ளது. எதிர் தரப்புக்கும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், ரஜ்னிஷ் பட்நாகர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.
உமர் காலித்தின் பேச்சு மோசமானதாக, வெறுக்கத்தக்கதாக மற்றும் அவதூறுக்கு சமமானதாக இருக்கலாம்.  ஆனால் அது ஒரு பயங்கரவாத நடவடிக்கைக்குச் சமமானதாக இருக்காது” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. 
இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 4ம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

;