states

img

தானே லிஃப்ட் விபத்து - 7 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் உள்ள 40 மாடிகளைக் கொண்ட ருன்வால் காம்பிளக்ஸ் கட்டடத்தில் நேற்று மாலை பணிகள் நடைபெற்று வந்தன. பணிகளை முடித்து விட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கி கொண்டிருந்த போது, 16ஆவது தளத்தில் இருந்து திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.