மகாராஷ்டிர மாநிலத்தில் கர்பா நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற விஎச்பி-இன் அறிவுறுத்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் செப்டம்பர் 22 முதல் தொடங்கி 10 நாட்களுக்கு நடைபேறும் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான கர்பா-டண்டியா நிகழ்ச்சிகளுக்கு இந்து அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் (VHP) அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், நிகழ்ச்சிக்கு வருபவர்களின் ஆதார் அட்டை சர்ப்பார்க்க வேண்டும், நெற்றியில் திலகம் இட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு, அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. விஎச்பி அமைப்பினர் சமூகத்தை தீக்கிரையாக்க விரும்புகிறார்கள். மதத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயங்களைப் பெற விரும்புகிறார்கள். விஎச்பி கூறியது ஒன்றும் புதிதல்ல. நாட்டை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு பிறந்தது என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரும் முன்னாள் மாநில அமைச்சருமான விஜய் வடெட்டிவார் தெரிவித்துள்ளார்.