states

img

அமைச்சர்களுக்கான துறைகளை 5 நாளில் 4 முறை மாற்றிய எடியூரப்பா.... கர்நாடக பாஜக அரசின் பொம்மை விளையாட்டு....

பெங்களூரு:
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், 60 எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு, முதல்வர் எடியூரப்பாவிடம் சண்டை போட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 21 அன்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளில் இருந்து விலகி பாஜக-வில் சேர்ந்த 7 பேருக்கு எடியூரப்பா அமைச்சர் பதவி வழங்கி னார்.இது நீண்டகாலமாக அமைச்சர் பதவியைஎதிர்பார்த்துக் காத்திருந்த சீனியர் தலைவர்களான ரேணுகாச்சாரியா, சித்து சவதி, எஸ்.ஏ. ராமதாஸ், அபய் பாட்டில், பி.ஆர். பாட்டில் யத்னால் போன்றவர்களை கொதிப்புக்கு உள்ளாக்கியது. அவர்கள், முதல்வர் எடியூரப்பாவின் ஆபாசவீடியோ ஒன்று எம்எல்ஏ-க்கள் கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதை வெளியிட்டு விடுவோம் என்று யாரெல்லாம் மிரட்டுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் எடியூரப்பா அமைச்சர் பதவிகளை தருவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, புதிதாக அமைச்சர் பதவியைப்பெற்றவர்களும், தாங்கள் கேட்ட துறையைக் கொடுக்கவில்லை என்று எடியூரப்பாவுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.எடியூரப்பாவும், அவர்களின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப, பொம்மை விளையாட்டு போலஇஷ்டத்திற்கு அமைச்சர்களின் துறைகளைமாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த திங்கட்கிழ மையன்று  இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை, நான்கு மணி நேரத்தில் இரண்டு முறை மாற்றினார். ஒட்டுமொத்தமாக 5 நாட்களில் நான்குமுறை அமைச்சர்களின் துறைகளை மாற்றி அமைத்துள்ளார்.

;