திருப்பூர், ஜன. 12 - பொங்கல் பண்டிகையின்போது மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாக் கள் நடத்த மேடை அமைக்க அனும திக்க வேண்டும் என இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் கோரியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், மாவட்டச் செயலா ளர் செ.மணிகண்டன் மற்றும் நிர்வாகி தனபால் ஆகியோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் கடந்த 43 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது 2020 மார்ச் 24 அன்று தொடங்கி தற்போது வரை கொரோனா பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தமிழக அரசு பொதுக் கூட்டங்கள், திருவிழாக்கள் நடத்த லாம் என அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்கள் விளையாட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையிடம் அனுமதி கோரியபோது, நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். அதே சமயம் மாலையில் வாழ்த் துரை, பாராட்டு நிகழ்ச்சி, குழந்தை களுக்கான கலை நிகழ்ச்சி நடத்தி போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்குப் பரிசு வழங்கிட மேடை அமைத்துக் கொள்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண் டும் எனக் கூறிவிட்டனர். ஆகவே, பொது மக்களுக்கு இடை யூறு இல்லாமல், சமூக இடை வெளியைக் கடைப்பிடித்து நிகழ்ச்சி நடத்திடவும், விழா மேடை அமைத்துக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பொங்கல் பண்டிகை, மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா ஆகியவற்றை நடத்த மேடை அமைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயன் தெரிவித்ததாக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன் கூறினார்.